Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரு.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை முன் இறந்த மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் சாலை மறியல்.

0

 

பணியிலிருந்தபோது மின்சாரம்
பாய்ந்து மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்.

பரபரப்பு – அதிகாரிகள் பேச்சு வார்த்தை

திருச்சியில் மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிய மின் ஊழியர்கள் இருவர் மின்சாரம் பாயந்து நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர்.

திருச்சி கேகே நகர் அருகேயுள்ள ஓலையூர் வட்டச்சாலை பகுதியில் புதிதாக பெட்ரோல் பம்ப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சி. கலாமணி (வயது 42) (காது கேளாதவர்), மணப்பாறை வேங்கைக் குறிச்சி ஆவணம்பட்டியை சேர்ந்த கி. மாணிக்கம் (37) இருவரும் அப்பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் நின்று பணியாற்றிக்கொண்டிருந்தனர் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, உயர் மின் அழுத்த கோபுரத்திலிருந்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தாக்கியது. இதில் கலாமணி உயிரிழந்து மின்கோபுரத்திலேயே சடலமாக தொங்கினார்.
தூக்கியெறியப்பட்ட மாணிக்கம் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மின்கோபுரத்தில் தொங்கிய கலாமணியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நிகழ்விடம் சென்று விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
இன்னிலையில் இரண்டு பேரின் உடல்களையும் வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.பேச்சுவார்த்தையின் போது ரூ.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி இன்றும் நீடித்து வந்தது.இந்நிலையில் இன்றும் 2வது நாளாக
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்களின் உடலை பெற முடியாது என்று கூறி, அவரது உறவினர்கள், மின்வாரிய ஊழியர்கள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.