டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் அமமுக சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வழங்கினார்
திருச்சி ஏர்போர்ட் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் 61வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் அவர்கள் ஏற்பாட்டில், பகுதி அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள விழியிழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
ஏர்போர்ட் பகுதியில் மற்றொரு நிகழ்ச்சியாக, 59வது வட்ட செயலாளர் சுரேஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல், ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி அவர்களின் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங் தலைமையில்,
ஜங்ஷன் வழிவிடும் வேல்முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட, மாவட்ட, பகுதி, ஒன்றிய, சார்பு அணி, ஊராட்சி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.