Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

0

'- Advertisement -

 

Ad banner

மழைநீரில் மூழ்கி அழுகிய
நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் சாகுபடி செய்கிற பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிய நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு 40ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

 

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.