திருச்சி தில்லை நகரில் நம்ம மாடி டர்ஃப் கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார் .
திருச்சி தில்லைநகரில் “நம்ம மாடி டர்ஃப்” கோர்ட் திறப்பு விழா – அமைச்சர் நேரு திறந்து வைத்தார்!
திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் “நம்ம மாடி டர்ஃப்” என்ற பெயரில் சிறிய அளவிலான கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் நம்ம மாடி டர்ஃப் உரிமையாளர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளம் என இதன் உரிமையாளர் தெரிவித்தார் .