அதிக பயணிகளுடன் விபத்து ஏற்படும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பாமகவினர் மனு.
அதிக ஆட்களை ஏற்றி வேகமாக செல்கின்றனர்:
பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள்.
உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பா.ம.க வினர் மனு.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து. காந்தி மார்க்கெட், பால் பண்ணை வழியாக. செல்லக்கூடிய. 5 தனியார் பேருந்துகளும் மற்றும் சில பேருந்துகளும் டவுன் பஸ் அரசு அனுமதித்துள்ள. இருக்கையில் அமர்ந்து செல்வதற்கு 40 நபர்களும் நின்று பயணம் செய்ய 40நபர்களும். மொத்தம் 82 பயணிகள் பயணம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது .
ஆனால் மிகவும் அதிகப்படியான ஆட்களை ஏற்றி வண்டிகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு செல்கின்ற பொழுது அதிகப்படியான விபத்துகளும், போக்குவரத்துக்கு இடையூறுகளும் உருவாகிறது. அனைத்து தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனகள் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்தி போதையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அரசு பேருந்து நிலையத்தில் (பஸ்டாப்) நிறுத்தாமல் அரசு பேருந்துகளை முந்தி பல விபத்துகள் நடந்து வருகிறது இது சம்பந்தமாக ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சம்பந்தமாக 03.12.2024 அன்று போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் என்னை நேரில் அழைத்து விசாரணை செய்த போது பல ஆதாரங்களை காட்டியும் இது வரை அந்த தனியார் பேருந்துகள் மீதும் , ஓட்டுனர் நடத்துனர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க பட வில்லை .இது சம்பந்தமாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்
மாவட்ட அமைப்பு செயலாளர் எழிலரசன் , மாவட்ட சிறுபான்மை செயலாளர் ரபிக்பாய் தொகுதி தலைவர் ரமேஷ் , ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.