ரஜினியை தரைக்குறைவாக பேசிய உதயாநிதிக்கு இது ஒன்றும் புதிது அல்ல.ரூ. வெள்ள நீர்வடைய 4000 கோடி குழாய் பதித்ததற்கு பதில் ஜெனரேட்டர் வாங்கியிருக்கலாம. திருச்சியில் நடிகை கஸ்தூரி பேட்டி.
திமுகவை வீழ்த்த
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் திருச்சியில் நடிகை கஸ்தூரி.
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் நடிகை கஸ்தூரி,நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நவம்பர் 3 ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் என்ன விஷயங்கள் பேசப்பட்டதோ அது பெரிய விஷயமாகாமல் கஸ்தூரி பேசாத விஷயம்தான் மிகப்பெரிய செய்தியானது.
அன்று பேசிய விஷயங்களை மீண்டும் எப்படி ஆக்கபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் அணுகுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம்.
பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.
இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம்.
2026 இல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளார். அப்படி நடந்தால் விஜய் வாய்க்கு சர்க்கரை போடலாம் .
நீண்ட நாட்களாக திமுகவுடன் வாக்கப்பட்டு விசிக அவர்களுடன் இருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை.
வி.சி.க வில் திருமாவளவன் எம் பி ஆக இருப்பதால் அவர் வெளியே வர வாய்ப்பு இல்லை . இனிமேல் அவர் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூன் இருக்க வேண்டும் என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது. .
சினிமா செய்திகளை பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளது அவரது ரெட்ஜெயிண்ட் குறித்து பேசியுள்ளார் என்பது தெரிகிறது.
உதயநிதிக்கு தரை குறைவாக பேசுவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசி உள்ளார், ரஜினி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார் தற்பொழுது விஜய், ஆதவ் அர்ஜீன் குறித்தும் பேசி உள்ளார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார்.
உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இல்லை தான் என கடந்த 60 ஆண்டுகளாகமாய் இருந்து வருகிறது.
விஜய்யை பயன்படுத்தி அதிமுகவின் உண்மையான வீட்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம்
ஒரு கட்சிக் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனி தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும்.
வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சியது தான் தானாக தண்ணீர் வடியவில்லை, ஆனால் சமீபத்தில் வெள்ளம் வடிய 4000 கோடிக்கு குழாய்கள் அமைத்தோம் என கூறி உள்ளனர் . எதற்கு அந்த 4000 கோடிக்கு குழாய் அமைத்தனர் அதற்கு பதிலாக ஜெனரேட்டரும் மோட்டர் பம்புகளையும் வாங்கி இருக்கலாமே என கூறினார் .
விஜய், இ பி எஸ், அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்தி விட்டு திமுக பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சீமான் என்னை திட்டினாலும் பராவையில்லை திமுக வை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும்.
மக்களின் ஒரே ஆசை திமுக-வை வெளியேற்ற வேண்டும் என்பது தான். அதை திமுக வை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றார்.