அம்பேத்காரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்காரின் நினைவு தினத்தை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்
டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில்
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.
ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து
புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது,
இந்த நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,
ஒன்றிய, பகுதி, பேரூராட்சி,ஊராட்சி , வட்ட , கிளை செயலாளர்கள் & நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,