திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
மணல் கடத்தல், சட்ட விரோத மதுபான கூடம், கஞ்சா, விற்பனைக்கு துணை போனதாகவும்
இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும், அவர் சார்ந்த சமுதாயத்துக்கு ஆதரவாக பணியில் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரிக்க, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் தயாளன் சட்ட விரோத செயல்களுக்கு துணைபோனதும், லஞ்ச பணம் வசூலித்ததும் தெரிந்தது.
இதையடுத்து, தென் மண்டலத்துக்கு இன்ஸ்பெக்டர் தயாளனை பணியிடத்தை மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.