திருச்சியில்
தனியார் கம்பெனியின் இரும்பு கேட்டை திருடிய 3 பேர் கைது.
திருச்சி கொட்டப்பட்ட இந்திரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35) இவர் ஏர்போர்ட் காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி வைத்துள்ளார். அதில் காய்கறிகள்,பூ மற்றும் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த அலுவல வளாகத்தில் மேலே இருந்த கிரில் கேட்டை மர்ம ஆசாமிகள் சிலர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 25) கார்த்திகேயன் (வயது23) கார்த்திக் குமார் (வயது24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.