இன்று வ உ சி யின் குருபூஜை. திருச்சியில் மக்கள் தலைவன் வ உ சி பேரவையின் சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
மக்கள் தலைவன் வ உ சி பேரவையின் சார்பில் அவரது முழு உருவ சிலைக்கு . மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் குருபூஜை விழாவையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள
வ உ சி யின் திருஉருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
மக்கள் தலைவன் வ உ சி பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ராமச்சந்திரகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவசங்கர், நிர்வாகிகள் சுதாகரன், கண்ணதாசன் ஏபிஎல் ராமன், ஆர் டி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.