மணப்பாறையில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமினை அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பார்வையிட்டு ஆலோசனை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட மணப்பாறை நகரத்தில் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பார்வையிட்டு பணியில் ஈடுபட்ட அஇஅதிமுகவை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சந்திரசேகர், மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் எம். ராமமூர்த்தி மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டாக்டர்.இஸ்மாயில் வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் மணப்பாறை மாமன்ற உறுப்பினர்கள், மணப்பாறை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.