சுற்றுச்சூழலுக்கு உகந்த
காகிதப் பைகளை பயன்படுத்துவோம்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் நெகிழி பைகளுக்கு மாற்றாக காகித பைகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சி
திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் சுற்றுசூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவது குறித்து பேசுகையில்,
நெகிழி பைகளுடன் ஒப்பிடும்போது காகிதப் பைகள் தயாரிப்பதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படும். அதாவது காகிதப்பை உற்பத்தியானது பெட்ரோ கெமிக்கல்களை சுத்திகரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற குறைவான ஆற்றல் படிநிலைகளை உள்ளடக்கியது. இது குறைவான கார்பன் உமிழ்வுக்கு வழிவகுக்கும் .காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் உதவும். ஆனால் நெகிழி தயாரிப்புக்கு அதிக ஆற்றல் மூலம் தேவைப்படும். மேலும், நெகிழி பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்திவிடும். நெகிழி பைகளை ஒப்பிடும்போது காகித பைகள் எளிதில் மட்கும் தன்மை கொண்டவை . குப்பைகளில் குவிந்து கிடந்தாலும் கூட இயற்கையாக சிதைந்து விடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. மழை பெய்தாலும் ஓட்டைகளில் அடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் நெகிழி பைகள் மழை பெய்யும் போது வாய்க்கால்களில், சாலையோரங்களில் இருக்கும் சிறு துவாரங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி தண்ணீரை வடிய விடாமல் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மேலும் நெகிழி பையில் தேங்கி இருக்கும் நீர் கொசு வளர்ச்சியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் நாம் எவ்வளவு காகித பைகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு மரங்கள் நடுவதும் முக்கியமானது என்றார். ஒயிட் ரோஸ் பொதுநல சங்க தலைவர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நாட்டின் நலப்பணித் திட்ட அலுவலர் சுப்ரமணி வரவேற்க, நிறைவாக கருப்பசாமி நன்றி கூறினார். வரலாறு, வணிக கணிதம், புள்ளியல் மென்பொருளியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.