திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி 37 வார்டுக்கு உட்பட்ட ஏர்போர்ட் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
நேற்று மாலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் ஏர்போர்ட், புதுக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி வீடு வீடாக நடந்துசென்று நோட்டீஸ் அளித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் வீரசக்திக்கு மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அவர்களிடம் இப்பகுதியில் தான் செய்ய உள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி டார்ச்லைட் (மின்கல விளக்கு) சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அவருடன் ம.நீ.ம மாவட்ட
பொருளாளர் கிஷோர் குமார், நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ், தொழில் முனைவோர் மண்டல செயலாளர் அய்யனார், நகர செயலாளர் சரவணன், கே.ஜே.எஸ்.குமார், துணை செயலாளர் சதீஷ்குமார் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் வீரசக்தி உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.