திருச்சியில் பல்வேறு இடங்களில் தினமும் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ வேலு தேவர் ஐயா அறக்கட்டளை .
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில், ஶ்ரீ ஶ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர் அன்னதான திட்டம் தொடக்கம்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரு பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவில். இந்த கோவிலில் தினம்தோறும் காலை 6 மணி, 8 மணி, 12 மணி மற்றும் மாலை 4 மணி, 6 மணிக்கு ஐந்து கால விஷேச பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல 9 அமாவாசையன்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கோவிலில் ஆரோக்கியமான காய்கறிகளை கொண்டு, சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட உணவு மூன்று வேளையும் அன்னதானமாக வழங்கப்படுகிறது. அதேபோல வாழும் ஞான குரு ஶ்ரீலஶ்ரீ வேலு தேவர் சித்தர் அவர்களின் ஆசைப்படி “மனிதனுக்காக மகான் இயக்கம் ஶ்ரீ ஶ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை” சார்பில் திருச்சியின் பல்வேறு இடங்களில் காலை, பகல், இரவு என மூன்று வேளை அன்னதானத்திட்டம் இந்த செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்த அன்னதானமானது திருச்சி அரசு மருத்துவமனை, டிவிஎஸ் டோல்கேட், சிங்காரத் தோப்பு, காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஶ்ரீலஶ்ரீ வேலு தேவர் அய்யாவின் கடைக்கண் பார்வையால் மக்களின் பிரச்சனைகள் நீங்கும். அவரை நம்பி வந்தவர்களை அவர் கைவிடுவதில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.