திருச்சி: எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரயில்வே தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு.
திருச்சியில் பரபரப்பு சம்பவம்
எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த
2 ரெயில்வே ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு.
தென்னக ரெயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் மற்றும் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளரும்,
ஏஜஆர்எப், அகில இந்திய தலைவர் கண்ணையா உள்ளிட்ட எஸ்ஆர்எம்யூ நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும், சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை ரெயில்வே ஊழியர்களான திருச்சி கல்லுக்குழி சேர்ந்த மணிமாறன் மகன் அறிவழகன் , ரமேஷ் ஆகியோர் வெளியிட்டு வந்தாக தெரிய வருகிறது.
இதையடுத்து இருவர் மீதும் திருச்சி மாநகர ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலிசாருக்கும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்குகொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ரெயில்வே தொழிலாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.