ஸ்ரீரங்கத்தில்
மணல் திருட முயன்ற3 பேர் 2 .ஜெசிபி வாகனத்துடன் கைது.
திருவரங்கம் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் ராம்சிங் தலைமையிலான போலீசார் கொள்ளிடக்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ஜேசிபி எந்திரங்களுடன் மணல் திருட முயன்றதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவானைக்காவலை சேர்ந்த மாணிக்கம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த செல்வராஜ், திருவானைக்காவலை சேர்ந்த திவாகர் என்பது தெரிய வந்தது .அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு ஜேசிபி எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்ட இளையராஜா என்ற நபரை தேடி வருகின்றனர்.