மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் வரும் 5ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் நடுவே தரமான தடுப்பணை கட்டி தரக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மாவட்டச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான
ப. குமார் தலைமையில் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் அமைத்து ஒரு சில மாதங்களில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்..
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித் தர வலியுறுத்தியும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் வருகின்ற 5ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலன், சின்னசாமி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், இளைஞரணி சண்முக பிரபாகரன்,
ஒன்றிய செயலாளர்கள் எஸ். கே.டி. கார்த்திக், ராவணன் ,நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், வர்த்தக அணி சூரியூர் ராஜா, பாசறை அருண் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நகர கழக பேரூர் கழக பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.