ஜமாத்தார்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்: மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள்
ஜமாத்தார்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்: காயல் அப்பாஸ் வேண்டு கோள்
இது பற்றி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்க்கூடிய காயல் பட்டிணம், கீழக்கரை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லுர், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, பள்ளப்பட்டி, இளையான்குடி போன்ற பல்வேறு ஊர்களில் கஞ்சா என்கிற போதை பழக்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்க படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றதிற்கு சிந்திக்க விடாமல் கஞ்சாவிற்கு அடிமையாக்கி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கையை சிரழித்து வரும் சமூக விரோதி கும்பலைகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் செய்யப்பட்ட கஞ்சாவை பயன் படுத்துவதனால் தங்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக மாறும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் உணர்ந்து கஞ்சா போதைக்கு அடிமையாகமல் மீண்டுவர வேண்டும்.
கஞ்சா போன்ற போதை பொருள்களால் இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் ஜமாத்தார்கள் அனைவரும் ஓன்றுனைத்து இளைஞர்களை நல் வழி படுத்த முன் வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக வேண்டுகோளை முன் வைக்கிறோம் என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.