திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் பகுதியில் சோ்ந்தவா்கள் முகமது அக்பா் – அசன் பீவி (வயது 36) தம்பதி. இவா்களுக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அசன்பீவி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து காட்டூரை சோ்ந்த தனியாா் பள்ளிக் காவலாளியான ஜோதி (எ ) ராஜா முகமதுவை (வயது 48) 2 ஆம் திருமணம் செய்தாா்.
இந்நிலையில் ராஜா முஹம்மது இரவில் தூங்கும்போது அசன்பீவி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் அதை கைப்பேசியில் படம் எடுத்தும் வைத்திருந்தாா்.
இதையறிந்த அசன்பீவி திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜா முகமதுவை கைது செய்து, திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.