நாடு வளர்ச்சி பெற
நல்லாட்சி அமைந்திட
அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்
வாக்களிக்க பணம் கொடுப்பதும்
பணம் பெறுவதும் சட்டப்படி குற்றம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிட்டிசன் அமைப்பு சார்பில் 100% பொதுமக்கள் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி காந்தி சந்தை முன்பு நடைபெற்றது. சிட்டிசன் அமைப்புத் தலைவர் சேகரன் தலைமை வகித்து துண்டு பிரசுரம் வழங்கி பேசுகையில், ஓட்டுரிமை என்பது 1952ஆம் ஆண்டு வரை ஆட்சியாளரை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பண்டைய காலத்தில் அரசனின் மூத்த மகனே அரசுரிமை தகுதியுடையவன். அவனின் குணநலன்களைப் பொருத்தே மக்களின் வாழ்வு அமைந்தது. அப்போதும் நமது மன்னர்கள் கிராம சபைகளுக்கு குடஓலை என்கிற முறையில் தேர்வு நடந்து இருக்கிறது. அதன்படி வேட்பாளர் பெயரை குடத்தில் எழுதிப் போட்டு ஒரு சிறு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லி தேர்வு செய்தனர். 1909 ஆம் ஆண்டு மற்றும் 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இரட்டை ஆட்சி அமுல்படுத்திய போது 21வயதை அடைந்து, சொத்து இருப்பவர்களுக்கே ஓட்டு என்பது நடைமுறையில் இருந்தது. பலரின் தியாகங்களுக்கு பின் இந்தியா சுதந்திரம் பெற்று 1952ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, என் தேசத்தின் குடியரசு என்பதில் எளிய மனிதனும் சக்தி படைத்த மனிதனுக்குரிய உரிமையை பெற வேண்டும் என்று குடியரசு என்பது இருபத்தொரு மனிதர்களின் அமர்வு அல்ல அது கீழிருந்து ஒவ்வொரு கிராமப்புற மக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 21 வயது நிரம்பிய அத்துணை குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தினார். தற்போது அது 18 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.இப்படிக் கிடைத்த வாக்கை நாம் எப்படித் போற்றிப் பாதுகாக்க வேண்டும். ஓட்டு உரிமையை நமக்கு அளித்த கவுரவமாக கருதி தவறாக தகுதி உள்ளவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி 100% வாக்களிக்க வேண்டும்.
நமது ஓட்டை கண்டிப்பாக சீர்தூக்கி மக்களுக்கு நன்மை செய்யும் வேட்பாளருக்கே பதிவு செய்ய வேண்டும். யாரையுமே பிடிக்கவில்லை என்றால் 49 ஓ பிரிவில் பதிவு செய்யலாம்.
நம் ஒரு ஓட்டு என்ன பெரிய மாற்றத்தை உண்டு செய்யும் என்று நினைக்க வேண்டியதில்லை. சிறுதுளி பெருவெள்ளம். தற்போதைய சட்டப்படி வாக்கிற்கு பணம் கொடுப்பது பெறுவது இரண்டுமே குற்றம் ஆகும். நம் அரசை தேர்வு செய்ய நமக்கு இருக்கும் வாய்ப்பை விட்டு விட்டு பின்னர் அது சரியில்லை இது சரியில்லை என்று புலம்புவதில் பயனில்லை நாடு வளர்ச்சி பெற நம் கடமையை செய்தால் மட்டுமே நல்லாட்சி சாத்தியமாகும் என பேசி துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
வழக்கறிஞர் இளங்கோவன், முகமது சர்புதீன், கார்த்தி, அண்ணாதுரை, மும்தாஜ், ராஜன், வில்பர்ட் எடிசன், ஷேக் தாவூது, சீனிவாசன் கணேஷ் ராஜசேகர் சிவப்பிரகாசம், சிபு,சௌந்தரம், கார்த்திகேயன், சுந்தர், முருகன், பகவதி, ஜான், யோகாம்பாள், யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.