திருச்சி அதவத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் பதினெட்டாவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.கே. பாலச்சந்தர் கலந்து கொண்டார் .
சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் கராத்தே மாணவி யஸ்வந்திக்கா 100 மீட்டர் தூரம் ஆம்னி காரை இழுத்து சாதனை புரிந்தார்.
இந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சகா மாணவிகள் வெகுவாக பாராட்டினர் .