திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை சுதந்திர தினத்திற்கு மறுநாள் திறக்க வந்தபோது, பள்ளியின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு மடிக்கணினிகள், பிரிண்டா் மற்றும் ஸ்மாா்ட் போா்டு உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை அளித்த புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.