திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி உடனடியாக தார்சாலை மற்றும் அடிப்படை வசதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உறுதி .
திருச்சி 14வது வார்டில் புதிதாக தார் சாலை, அடிப்படை வசதி செய்து தரக் கோரி அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில்
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .
திருச்சி மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு,இபி ரோடு, திப்புரான் தொட்டி தெரு, சின்ன கடைவீதி ரோடு ஆகிய சாலை பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலைகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு மேலோட்டமாக மூடப்பட்டு சாலையில் மேடும், பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துக்கு உள்ளானார்கள்.
மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.சாலைகளில் செல்லும் பொழுது புழுதி அடித்து சென்றது.மேலும் மேற்கண்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் வடிய நீண்ட காலமாக சாக்கடை துார்வாரப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் அந்த வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இதையடுத்து இன்று திருச்சி பாபு ரோட்டில் 14வது வார்டு பொதுமக்கள், வியாபாரிகள், ஜமாத் நிர்வாகிகள், பெண்கள் உள்ள ஏராளமானவர்கள்மாநகராட்சியை கண்டித்தும்,உடனடியாக தார் சாலை அமைத்து தரக் கோரியும், திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அப்பாஸ், சகாபுதீன், இலியாஸ், அப்பாகுட்டி, ஜெயக்குமார், செந்தில், ராஜ்மோகன், மல்லிகா, சகாதேவன்,
கே பி ராமநாதன், வக்கீல் கங்கைமணி,சக்திவேல் மற்றும் 14வது வார்டு அதிமுக நிர்வாகிகள் கதிர்வேல்,ஈஸ்வரன், சாந்தி,ஷகிலா ராஜசேகர்,குமார் முருகேசன்,ஆரிப், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு தகவல் அறிந்து திருச்சி. கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் 14வது வார்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாட்டு வருகிற 18-ம்தேதி அன்று 14வது வார்டில் சாலை பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது கடந்த இரண்டரை ஆண்டுகளாக சாலையை சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் மாநகராட்சி இந்த வார்டு அதிமுக கவுன்சிலர் வார்டு என்று புறக்கணிப்பதாக தெரிகிறது.பொது மக்களுக்கு நல்லது செய்ய தான் மாநகராட்சி இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது வேறுபாடு பார்க்காமல் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது ஐந்து வருடம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதற்கு காரணம் திமுக தான். ஆனால் ஐந்து வருடமும் மக்கள் பணி எந்தவித தடையும் இன்றி அதிகாரிகள் உதவியுடன் நடைபெற்றது. ஆனால் இன்று நாங்கள் கவுன்சிலராக வந்து மக்கள் பணி செய்ய முடியவில்லை.
மாநகராட்சி கட்சி வேறுபாடு இன்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலையை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.