அறம் சிங்க பெண்ணே திட்டத்தின் மூலம் 39 பெண்களுக்கு இ ஆட்டோகளை சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் முருகானந்தம் வழங்கினார்.
ரோட்டரி சங்கத்தின் “அறம் – சிங்க பெண்ணே” என்ற திட்டத்தின் மூலம்
39 பெண்களுக்கு இலவசமாக இ-ஆட்டோ.
சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் இன்ஜினியர் எம்.முருகானந்தம்
சாவியை வழங்கினார்.
சர்வதேச ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2023-24 ம் ஆண்டிற்கான, மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமாரின் கனவு திட்டமான “அறம் – சிங்க பெண்ணே” என்ற திட்டத்தின் மூலம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பாக, 39 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,
இ -ஆட்டோ இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
39 பயனாளிகளுக்கு சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் இன்ஜினியர் எம்.முருகானந்தம்
இ- ஆட்டோவின் சாவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார், மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாவட்ட ஆளுநர் தேர்வு கார்த்திக், மாவட்ட ஆளுநர் நியமனம் ஆர்.பி.எஸ்.சுப்பிரமணி, காவேரி மெடிக்கல் சென்டரின் இயக்குனர் அன்புச்செழியன், ரோட்டரி பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.