மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி அருகே காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்.ஜி.ஆா். நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம் ஆகிய பகுதிகளில் வரும் 6 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.