திருச்சி:வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலை.
வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம்
கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலை.
திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தம்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆற்றுக்குள் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்டதால், சாயும் நிலையில் உள்ளது. இதனால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் மிகுதியாக வரும் வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் விழும் அபாய நிலையை எட்டி உள்ளதால், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் கடந்த பல மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.