அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழாவை திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டாட தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோரிக்கை .
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்ததின கொண்டாட்டம் :
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோரிக்கை.
திருச்சி மாவட்ட தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வெங்காயமண்டி தங்கராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினமான வருகிற 11-ந்தேதியை(வியாழக்கிழமை) அரசு நிகழ்ச்சியாக நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்களும் ,அதிகாரிகளும் அரசு விழாவாக கொண்டாட உள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு விழாவாக கொண்டாட மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.