Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடிய மூன்று இளம் பெண்கள் உட்பட 4 பேர் கைது .

0

 

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை உள்ளிட்ட இடங்களில் திரைப்படப் பாடலுக்கு 3 இளம்பெண்கள் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் (ரீல்ஸ்) வெளியிட்டனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் செபாஸ்டின், உதவி ஆய்வாளர் ரேஷ்கா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, நடனமாடிய 3 பெண்கள், அதை வீடியோ எடுத்த ஒரு இளைஞர் என 4 பேரை, இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர்அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கூறும்போது, ”மத்திய அரசு அலுவலகங்கள், வளாகங்களில் அனுமதியின்றி புகைப்படம், வீடியோஎடுத்தல், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

உரிய அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.