திருச்சி மாவட்ட தடகள தங்கம், கோல்டன் அத்லெட்டிக் கிளப் இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா .
திருச்சி மாவட்ட தடகள சங்கமும், கோல்டன் அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா.
பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில் நடந்தது.
திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் எஸ்.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், கோல்டன் தடகள மன்ற செயலாளர் என்.ராஜேந்திரன், பரணிதேவகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
முன்னாள் செயலாளர் எஸ்.ரெங்காச்சாரி வரவேற்றார்
சிறப்பு விருந்தினராக IPS ஏ. மயில்வாகனம் கலந்து கொண்டு
பயிற்சி முகாம் சுமார் ஒரு மாத காலம் 80 பேர் மேற்பட்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் இந்த மாதம் ஒய்வு பெறும் கோல்டன் தடகள சங்க நிர்வாகி, தடகள வீரர், சாரண, சாரணிகளின் பயிற்சியாளராக இருந்து ரயில்வேயில் பணி சேர்ந்து ரயில்வே அதிகாரிகளாக ஒய்வு பெறும் B.சுந்தரமூர்த்தி ஏ.பி.ஒ. திருச்சி அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் கோல்டன் தடகள மன்ற ரமேஷ், அந்தோணிராஜ், காணிக்கை இருதயராஜ், பத்மபிரியா, முஸ்தபா, மோகன், திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் நாகராஜ் , இளங்கோ, சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
முடிவில் திருச்சி மாவட்ட தடகள சங்க துணைச் செயலாளர் எம்.கனகராஜ் நன்றி கூறினார்.