மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு.
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.

திருச்சி மாவட்டம் அமையபுரம் வட்டம் நல்லாம் பிள்ளை வெள்ளிவாடி கிராமம் சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர் என்பவர், கடந்த மாதம் 30.04.24 மூளைச்சாவு அடைந்து இறந்ததை அடுத்து அவரது உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர்.
இந்தநிலையில் உடலுறுப்பு தானம்
செய்த அக்குடும்பத்தினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.ரா.சந்திரசேகர், ஆர்.கே.ராஜா, தமிழ் செம்மல் திருக்குறள் புலவர் நாவை சிவம், ஆர்.இளங்கோ உள்ளிட்ட
மக்கள் சத்தி இயக்கம் நண்பர்கள் நேற்று கலந்து கொண்டு அந்த குடும்பதினரை பாராட்டி,கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழும், நிதி உதவியும் வழங்கினார்கள் .
இதுப்போல கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்த 20 மேற்பட்ட குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கெளரவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .