குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம் நடந்தது. இதற்கு புதுக்கோட்டை குழு பேராசிரியர்கள் டாக்டர். ம.விஜயகுமார், மண்ணியியல் துறை பேராசிரியர் டாக்டர்.ராதா,
புள்ளியியல் துறை பேராசிரியர் ஆகியோர் வழிநடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் மாத்தூர் கிராமத்தில், குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவி சுஜிதா வாழைமரத்தில் வைக்கும் வாழைத்தார் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதேபோல், தீவனப்பயிர் நேர்த்தி செயல்முறை விளக்கம் நடந்தது.
இதற்கு புதுக்கோட்டை குழு பேராசிரியர்கள் டாக்டர்.ம.விஜயகுமார், மண்ணியியல் துறை பேராசிரியர் மற்றும் டாக்டர்.ராதா, புள்ளியியல் துறை பேராசிரியர் ஆகியோர் வழிநடத்தினர்.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவி மு.ஜீவரேகா தீவனப்பயிரினை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் மா மரத்தில் பூச்சிகளை குறைக்க செயல்முறை விளக்கம் நடந்தது.
இறுதி ஆண்டு மாணவி ரா.பாரதி மாமரத்தில் பெருகி வரும் தண்டு துளைப்பான் பூச்சியை குறைப்பதற்கு மாமரத்தில் திணிப்பு நுட்பத்தை செய்து காட்டி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், மாணவி சுபிட்சா கருப்பு பூஞ்சை என்னும் நோயை கட்டுப்படுத்துவதற்காக மைதா கரைசலை தெளித்து காட்டி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வுகளில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .