திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா சுந்தரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு.
திருச்சி திருவானைக்காவல்
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்
கல்லூரியில் முப்பெரும் விழா
சுந்தரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு.
திருச்சி திருவானைக்காவல்
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினர் சுதந்திர போராட்ட தியாகி, சுந்தரம் தலைமையுரையாற்றி, கல்வி, விளையாட்டு மற்றும் கலைகளிலும் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கினார். மேலும் சிறந்த ஆசிரியர் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் முனைவர் பிச்சைமணி ஆண்டறிக்கையை வாசித்தார். கருப்பையா, உடற்கல்வி இயக்குநர் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையையும் முனைவர் பிரபு கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் கலைத்துறை ஆண்டறிக்கையையும் வாசித்தனர். மாணவர் பேரவை தலைவர் சிவராஜ் உரையாற்றினார்.
செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் பிச்சைமணி ஆகியோர் பேசும்பொழுது: –
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 3,500 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். சுமார் 2,800 பேர் கிராமப்புறங்களில் இருந்து வந்து படிக்கிறார்கள். 2016-ம் ஆண்டு இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரமும், 2022-ம் ஆண்டு ஏ பிளஸ் கிரேடு அங்கீகாரமும் வழங்கப்பட்டது. எங்கள் கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
கடந்த ஆண்டு ரூ.50 லட்சமும், அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.85 லட்சமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. கல்லூரியில் சிறந்த லேப் வசதி உள்ளது. விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்தாண்டு புதிய பாடப்பிரிவாக பி.காம். சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடங்க அனுமதி பெற்றுள்ளோம்.
3 முதல் 5 ஆண்டுகளில் இந்தகல்லூரியை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பல்கலைக்கழகமாக மாறும்போது, தற்போதுள்ள அதேநோக்கத்தோடு ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி சேவையாற்றுவோம். எனக் கூறினர் கல்லூரி முதுநிலை துணை முதல்வர் ஜோதி, துணைமுதல்வர்கள் உபேந்திரன், கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் மோகன், செயலரின் உதவியாளர் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் கல்லூரி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்
படவிளக்கம்
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில்முப்பெரும் விழா இன்று நடைபெற்றது இதில் சுதந்திரப் போராட்டத் தியாகி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் கலை துறையில் சிறந்து விளங்கிய மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சான்றிதழையும் வழங்கிய போது எடுத்த படம் அருகில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் வெங்கடேஷ் கல்லூரி முதல்வர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் உள்ளனர்