Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு. திருச்சியில் போய நாயக்கர் இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி .

0

'- Advertisement -

 

Ad banner

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை தாங்கினார்.

நாங்கள் சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் இவை அனைத்திலும் பின்தங்கிய நிலையிலேயே தான் இருக்கின்றோம்.

அதிலும் தமிழகத்தில் எங்களின் ஓட்டுக்களை பெறவே அதிமுக, திமுக இரு கட்சிகளும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் மட்டும் அறிவித்துவிட்டு ஆட்சி அமைத்தவுடன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசுவதில்லை.

எனவே இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை அறிவித்துள்ளார்.

இவ்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.