திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
தனியார் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல பரபரப்புடன் காணப்பட்டனர்.
அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கு அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வாலிபரை கடக்க முயன்ற போது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டார்.இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
முதலில் பஸ்சில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். பின் போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர் . அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பது திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சில் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல்நிலை நசுங்கி இறந்தது தெரிய வந்தது.இறந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை.
பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் நடித்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமடைந்து பஸ்சின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது
இதற்கு இடையில் அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.