பாராளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்கு பதிவு. வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம் .
18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதற் கட்ட தேர்தல் ஏப்ரல் 19; 2 ஆம் கட்டம் ஏப்ரல் 26; 3 ஆம் கட்டம் மே 07; 4 ஆம் கட்டம் மே 13; 5 ஆம் கட்டம் மே 20; 6 ஆம் கட்டம் மே 25; 7 ஆம் கட்டம் ஜூன் 01 ஆம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும். மார்ச் 20 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 27 ஆகும். மார்ச் 28 அன்று வேட்புமனு மறுபரிசீலனை நடக்கும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி ஆகும்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிகப்படும்.