திருச்சியில்
லாட்டரி விற்ற 5 பேர் கைது.மோட்டார் சைக்கிள் செல்போன்கள், பணம் பறிமுதல்.
திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது,
இதையடுத்து திருச்சி மாநகரில் ஏர்போட், கோட்டை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது தாவூத், தங்கராஜ், சாலமோன், தியாகராஜன், பாண்டியன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள்,2 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது