திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் குறித்து
மாநகர் மாவட்ட அதிமுக. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் இன்று 14-ந் தேதி (புதன்கிழமை) மலைக்கோட்டை பகுதியில் பகுதி செயலாளர்
அன்பழகன் ஏற்பாட்டில் கீரைக்கடை பஜாரில் மாலை 6 மணிக்கும், புத்தூர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் புத்தூர் மந்தையில் மாலை 7 மணிக்கும் நடக்கிறது.இந்த கூட்டங்களில்
தலைமைக் கழக பேச்சாளர்
துகிழிநல்லுசாமி பேசுகிறார்.
அதே போல 17-ந் தேதி
(சனிக்கிழமை)
ஏர்போர்ட் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில்
சுப்ரமணியபுரம் எம்ஜிஆர் சிலை அருகிலும்,
தில்லை நகர் பகுதி
சார்பில் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா ஏற்பாட்டில்,
தென்னூர் வண்டி ஸ்டாண்டிலும் மலைக்கோட்டை பகுதி சார்பில் பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில்
ஆண்டாள் வீதி கருப்புசாமி கோவில் அருகிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கிறது.இந்த கூட்டங்களில்
கழக மகளிர் அணி துணைச்செயலாளர்
அமுதா பேசுகிறார்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,
வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொண்டர்கள் மற்றும்
மகளிரணியினர் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.