அண்ணாவின் 55வது நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அண்ணாவின் திருவுருபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை கழக செயலாளர் சுபத்ரா தேவி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எஸ். ராவணன், பொன்மலை பகுதி கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர கழகச் செயலாளர் எஸ்.பி. பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ் , முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலமூர்த்தி, மீசை ஆறுமுகம் சக்தி வட்டக் கழக செயலாளர் சரவணன், தெய்வ மணிகண்டன்,கோல்டன் A ஆபிரகாம், ரோஷன் முத்துக்குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .