.
ஸ்ரீரங்கத்தின் சப்இன்ஸ்பெக்டர்வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65) இவர்
எஸ்.பி.சி ஜ டி பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் கடந்த
23 ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு ஜெயங்கொண்டத்தில் அவருடைய மகன் நிச்சயதார்த்தத்துக்கு சென்றிருந்தார். இந்நிலையில் மர்ம சாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்து பவுன் நகை மற்றும் 2,500 கிராம் வெள்ளி பொருட்களை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
ஊரிலிருந்து வீட்டுக்கு திரும்பிய ராஜாராம் வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜாராம் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருட்டுப் போன நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.