புங்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியின் ஊழல்களை எடுத்துக் கூறிய ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக்கு பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி மாவட்டம் மணிகண்டன் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புங்கனூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சகாயராஜ், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் , சுய உதவி குழு பெண்கள் , 100 நாள் வேலை பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் செய்த ஊழல்களை ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் எடுத்துக் கூறிய போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த ஆறு மாதமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி இல்லாததால் அவரது பெயரைக் கூறி கிளர்க் கண்ணன் ஊழலில் ஈடுபட்டதாக கூறினார் கார்த்தி.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் இருவரையும் சமாதானம் செய்தார்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர மறுப்பதாக பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றம் சாட்டினர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கண்டிப்பாக குடிநீர் இணைப்பு தரப்படும். மாட்டு கொட்டாய்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாது அப்படி தேவையில்லாத இடத்தில் இணைப்பு இருந்தால் அதனை உடனடியாக துண்டிக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினார் .
அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி கிராம சபை கூட்டத்தில் புங்கனூர் ஊராட்சியில் நடைபெறும் ஊழல்களை வெளிப்படையாகவும் தைரியமாக எடுத்துக் கூறியதை பார்த்த பொதுமக்கள் கார்த்தியை வெகுவாக பாராட்டினார்கள்.