திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தெற்கு மாவட்டம் சார்பில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் சிலையை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில்
தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி சிலை திறப்பு
காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டி.வி.எஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
திருச்சியில் திறப்பு
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டது.
அந்த சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு க. செயலாளரும்,
பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி மாநகர செயலாளர்கள் மதிவாணன், மேயர் அன்பழகன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது , கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன்,பகுதிச் செயலாளர்கள் கொட்டப்பட்டு இஎம் தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார்,இளைஞர் அணி வெங்கடேஷ் குமார், ஏ.பி.ரகுநாதன், ஜோயல், மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.