உழைப்பவர்கள் தான் கட்சி பதவிக்கு வருகிறார்கள். திருச்சி பொன்மலைபட்டியில் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் .
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்வு.
திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர தி.மு.க பொன்மலை பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் ஏற்பாட்டில் திருச்சி பொன்மலை பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம். அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,
அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றனர்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகரம், பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது
பொதுக் கூட்டத்துக்கு பொன்மலை பகுதி தி.மு.க. செயலாளர்,
இ.எம். தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக வழக்கறிஞர் அணி மாநகர அமைப்பாளர் பன்னீர்செல்வன், வட்டச் செயலாளர் வரதராஜன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள் .
நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாநகர தி.மு.க. செயலாளர்
மு. மதிவாணன், சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ் குணசேகரன் சபியுல்லா மாநில அணி செயலாளர் மாமன்ற உறுப்பினர்
என். செந்தில் . மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் மேலும் மாவட்ட மாநகர், பகுதி நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில்
மாவட்ட விவசாய அணி செயலாளர் கோ. ரமேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர அமைப்பாளர்
டி. செந்தில்,வட்ட செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் நன்றி கூறினார்கள்
மாநிலத்தை ஆளும் திறமை படைத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் – திருச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு.
உழைப்பவர்கள் கட்சிப் பதவிக்கு வருகிறார்கள்.
வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என பேசுபவர்களுக்கு என் கேள்வி ஒன்றுதான். என் பிள்ளை திமுகவில் தான் உழைக்க இயலும். அதைவிடுத்து மாற்றுக்கட்சியிலா சேர்ந்து பணியாற்ற முடியும் ?
நாடாளுமன்ற தேர்தலுக்காக மதத்தை வைத்து இப்போது அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அயோத்தியில் திறக்கும் ராமர் கோயிலுக்காக இந்தியா முழுக்க அரைநாள் விடுமுறை என்பது தேவையா ?
சாதனைகளை வைத்து வாக்கு கேட்கும் தகுதியோடு நாம் இருக்கிறோம் – எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம்