Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் திருச்சி பொன்மலை பட்டியில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம். அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு .

0

'- Advertisement -

 

பொன்மலை பகுதி தி.மு.க. சார்பில்
பொன்மலை பட்டியில் இன்று
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
அமைச்சர்கள் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று
(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பொதுக் கூட்டத்துக்கு பொன்மலை பகுதி தி.மு.க. செயலாளரும், திருச்சி மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருமான இ.எம். தர்மராஜ் தலைமை தாங்குகிறார். முன்னதாக வழக்கறிஞர் அணி மாநகர அமைப்பாளர் பன்னீர்செல்வன், வட்டச் செயலாளர் வரதராஜன் ஆகியோர் வரவேற்று பேசுகிறார்கள்.
இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர தி.மு.க. செயலாளர் மு. மதிவாணன், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், எஸ்.ஆர். எம்.யூ கோட்டச் செயலாளர் வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.என். சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாநில அணி செயலாளர்கள் சபியுல்லா சல்மா, கவுன்சிலர் என். செந்தில் வாழ்த்துரை வழங்குகிறார்கள். மேலும் மாநகர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். முடிவில்
மாவட்ட விவசாய அணி செயலாளர் கோ. ரமேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர அமைப்பாளர் டி. செந்தில்,வட்ட செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

பொதுக் கூட்டத்தை முன்னிட்டு விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு பிரகாஷ் நடன குழுவின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.