திருச்சி கிழக்குத் தொகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் .
திமுக இருவர்ணக் கொடி ஏற்றி பொற்கிழி வழங்கும் நிகழ்வு.
ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதியில் நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர்
மு. மதிவாணன் தலைமையில்
தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்
அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு கழக இரு வர்ண கொடியை ஏற்றி வைத்து திமுகவின் மூத்த முன்னோடிகள் 100 நபர்களுக்கு பொற்கிழியை வழங்கி சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்
கே என் சேகரன் சபியுல்லா செந்தில் பகுதிகழகச் செயலாளர் மோகன் மற்றும் நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் முதலில் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜின் பெயர் தான் வரவேற்புரை என இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு தொகுதி எம்எல்ஏ நினைக்க வேண்டிய கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
கிழக்கு தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டாலும் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் புறக்கணித்து வருகிறார் என திமுக தொண்டர்களே கூறுகின்றனர் .