கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவண தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவண தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் தென்னலூர் கணேசன் மழவராயர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் உறையூர் சாமி, இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், மாநில பொறுப்பாளர் தர்மா, செந்தமிழ் ,
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் அகிலன் நாட்டார், மகேஷ் தேவர் , பிச்சாண்டார் கோயில் முருகன் , சுதர்சன், ரமேஷ், ஆகாஷ் , திருக்காட்டுப்பள்ளி விக்னேஷ் , புதுக்கோட்டை அருண் பாண்டி , மிளகு பாறை தம்பு பிரவின், பிரபு, மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அழகேசன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிறுவன தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் .