அனைத்து பெண்களிடமும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.குஷ்பு ஆவேசம்
அனைத்து பெண்களிடமும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.குஷ்பு ஆவேசம்
திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – குஷ்பு காட்டம்
திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இந்துப் பெண்கள் குறித்து இழிவாக பேசிய திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார். மனுதர்மத்தில் இந்துப் பெண்கள் அனைவரும் இழிவாக நடத்தப்பட்டதாக திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திருமாவளவனுக்கு எதிராக பல்வேறு ஹேஸ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகின்றன.
இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, மனுதர்மத்தில் எங்கேயும் பெண்கள் குறித்து இழிவான வார்த்தைகள் இல்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் பேச்சு குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.