திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்வமுடன் இணைந்து வரும் புதிய வாக்காள இளைஞர்கள் .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரின் தலைமையை ஏற்று
திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 47-A வது வட்டச் செயலாளர், கொட்டப்பட்டு ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த, புதிய தலைமுறை வாக்காள இளைஞர்கள்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் தலைமையில், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம், ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங், மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பெஸ்ட் பாபு, அவைத்தலைவர் நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்