காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள் அன்பளிப்பு .
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு.
தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம் காமராஜர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த குருவி என்கிற சுப்பிரமணியன் ஏறத்தாழ ரூ.30,000 மதிப்புள்ள 120 எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களை பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கியதோடு கல்வியே வாழ்வை மேம்படுத்தும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
தண்ணீர் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கல்வி என்று திருக்குறளை மேற்கோள் காட்டி கவுன்சிலர் தலைமை உரையாற்றினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அனைவரையும் வரவேற்றார். காருகுடி வார்டு கவுன்சிலர் தனபால், குட்டி என்கிற ராஜ்குமார், சதீஷ் ,காமராஜ் ,
ராஜேந்திரன் முருகேசன், பிச்சுமணி மற்றும் பலர் இந்த இனிய நிகழ்விலே பங்கேற்று சிறப்பித்தனர். மருத்துவத் துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தொண்டு உள்ளத்தோடு பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கிய இந்த இனிய நிகழ்வை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.