திருச்சி உறையூரில் போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது . போதை மாத்திரைகள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஏராளமான மாத்திரைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி உறையூர். குழு மணி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் தினந்தோறும் வியாபாரிகள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பொது மக்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது .
இதையடுத்து திருச்சி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் போதை மாத்திரைகள் விற்றதாக திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த அப்துல் சபிக் (வயது 22 ), அதே பகுதியைச் சேர்ந்த உசேன் பாஷா (வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் ( வயது 19), திருச்சி குழுமணி ரோடு சீராதோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 19) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் அப்துல் ஷபிக் கல்லூரி மாணவர் என்பதும், மற்ற மூன்று பேரும் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டுபவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஏராளமான பொட்டலங்கள் போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.