Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்கோவில் அருகே தெருவில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவர்கள் .

0

'- Advertisement -

திருச்சியில் தெருவில் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன்களான
சீனிவாசன் மற்றும் விக்னேஸ்வரன்
ஆகிய இருவரும் தங்களது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பிஸ்டல் ரக துப்பாக்கி கிடந்தது கண்டு ,
அதுகுறித்து தங்களது தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரமேஷ் திருவரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் அங்கு வந்த திருவரங்கம் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த துப்பாக்கியானது ஏர் பிஸ்டல் என்ற வகையை சேர்ந்தது என தெரிய வந்தது.
ஸ்பிரிங் இயக்கத்தில் செயல்படும் அந்த துப்பாக்கியானது 10 மீட்டர் ரேஞ்ச் உள்ளது. இதற்கு உரிமம் தேவையில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து ஆர்ம்ஸ் ஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.